உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த மூன்றாவது ஆட்டத்தில் D பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதிக் கொண்டன.

ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் குரேஷியா வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் அண்டி ரெபிக் 53-வது நிமிடத்திலும், லூக்கா மாட்ரிக் 80-வது நிமிடத்திலும், இவான் ராகிடிக் 91வது நிமிடத்திலும் அடுத்தடுத்த கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

குரேஷியா வீரர்களின் ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்துக்கு முன் அர்ஜெண்டினா வீரர்களால் ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில், குரேஷியா அணி அர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

DgPWuDLWkAI56Sy

DgPXqzwXUAAjEJ2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here