உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் C பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். சற்று அதிரடியாக ஆடிய பிரான்ஸ் ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் அந்த அணியின் கில்லான் மொபாபே ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

DgOsl37WkAE5SV3

DgOu2kTW4AAMvUz