உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று மாலை 5.30 மணிக்கு C பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் டென்மார்க் அணியின் எரிக்சன் கோல் அடித்தார். இதனால் ஆட்ட ஆரம்பத்திலேயே டென்மார்க் 1-0 என முன்னிலை வகித்தது.

அதன் பின் ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் லெக்கி ரோஸ் தலையால் அடித்த பந்தை டென்மார்க் வீரர் யூசுப் பவுல்சன் தடுக்க முயன்றபோது பந்து கையில் பட்டது. நடுவர் VAR உதவியுடன் பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.

இதை பயன்படுத்தி 38-வது நிமிடத்தில் ஜெடினாக் கோல் அடித்தார்.இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியாமல் போனதால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

C பிரிவில் டென்மார்க் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 1 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

DgOD10vXUAAzNN_

DgOFHkUXUAEa2Bw