உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது.உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு 5.30 மணிக்கு B பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

மீண்டும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தை ரசிப்பதற்காகவே உலகம் பூராவிலுமிருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரொனால்டோ இந்த உலகக்கோப்பை முதல் போட்டியில் ஸ்பெயின் நாட்டிற்கெதிராக 3 கோல்களை அடித்து எதிரணியை கலங்கடித்தார், இந்தப் போட்டியிலும் அதே எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுக்கல் வீரர் கார்னரில் இருந்து பந்தை அடிக்காமல், மற்றொரு வீரருக்கு பாஸ் செய்தார்.

அவர் பந்தை கோல் எல்லையை நோக்கி அடிக்க, அந்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார்.

இதன் பின் மொராக்கோ அணி கோலிற்கு பதில் கோல் அடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் எவ்வளவோ முயற்சித்தும், போர்ச்சுக்கலின் தடுப்பாட்ட வியூகத்தை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே, போர்ச்சுக்கல் 1-0 என வெற்றி பெற்றது.இந்த தோல்வியின் மூலம் இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து வெளியேறும் முதல் நாடு
மொராக்கோ.

DgI5mvFWsAEtvRF

DgI7iQvWsAELSgb

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here