உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து H பிரிவில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இங்கிலாந்து அணி முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டு பின்பு 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

இதனிடையே 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்ட முடிவில், 1-1 என சமனில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினரின் கோல் அடிக்கும் முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Df_rVxQW0AMyCl8

Df_sR8dXUAE4IKl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here