உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘தீபாவளியிலிருந்து ஃபயிஸாபாத், அயோத்யா என்றழைக்கப்படும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார். அயோத்யாவில் தீபாவளியையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இந்த செய்தியை அவர் தெரிவித்தார்.
ஆதித்யநாத், அயோத்யாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ‘அயோத்யா என்பது நமது அடையாளம். அது நமது பெருமை. கடவுள் ராமரின் அடையாளத்தை அது சுமந்து நிற்கிறது. எனவே அவரின் பெருமை என்றென்றும் நிலை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றிலிருந்து ஃபயிஸாபாத் அயோத்யாவாக அழைக்கப்படும்’ என்று பேசினார்.

ஃபயிஸாபாத் மாவட்டத்தில் உள்ள சார்யு நதிக்கு இரு பக்கத்திலும் முறையே ஃபயிஸாபாத் மற்றும் அயோத்யா ஆகிய இரண்டு ஊர்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஃபயிஸாபாத் மாவட்டம், அயோத்யா மாவட்டமாக அழைக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

யோதி ஆதித்யநாத் தனது உரையில், ராமரின் தந்தையான ராஜா தஷரத்தின் பெயர், மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு சூட்டப்படும் என்றும், அயோத்யாவில் இருக்கும் விமானநிலையம் ராமரின் பெயருக்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றி உத்தரவு பிறப்பித்தார் ஆதித்யநாத். இந்நிலையில் அயோத்யா பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here